போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக, நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில்,
நடிகைகள் ராகிணிதிவேதியும், சஞ்சனா கல்ராணியும் ஒரே அறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் அடிக்கடி மோதிக் கொண்டனர்..இதையடுத்து சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி, இருவரும் வெவ்வேறு கைதிகள் அடைக்கப்பட்ட அறைகளுக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர்.இந்நிலையில், ராகினி திவேதி தான் தீராத முதுகுவலியால் அவதிப்படுவதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி அளிக்க வேண்டும் எனவும், அவரது சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் சிறைச் சாலையில் உள்ள மருத்துவமனையிலேயே ராகினி சிகிச்சை பெற கோர்ட் அனுமதி வழங்கியது. இந்நிலையில் .நடிகை ராகிணி முதுகுவலி அதிகமாக இருப்பதாக கூறி கதறியதால் உடனடியாக சிறையில் உள்ள மருத்துவமனையில் ராகிணி அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இதற்கிடையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி ராகிணி திவேதி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம் மனு மீதான விசாரணை வரும் 19- ஆம் தேதி வருகிறது.