பிஜேபியின் பிரச்சாரத்தூண்களில் ஒருவராக இருந்து இரு முறை பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகர் சத்ருகன் சின்கா .இவரது பதில்கள் கிண்டலாகவும் சூடாகவும் இருக்கும் . இதனால் இவரை ஷாட் கன் சின்கா என்றும் அழைப்பார்கள். அண்மைக்காலமாக பிஜேபி அரசினையும் ,பிரதமர் மோடியையும் வறுத்தெடுத்து வந்தார்.
தற்போது பீகாரில் தேர்தல் நடக்கபோகிறது. இந்த தேர்தலில் பிஜேபி வலுவாக இருப்பதாக சொல்லப்படுகிற பங்கிப்பூர் தொகுதியில் இவரின் மகன் லவ சின்காவை காங்கிரஸ் கட்சி களம் இறக்குகிறது. சத்ருகன் சின்கா இரண்டு தடவை வென்ற பாட்னா சாகிப் தொகுதியில் இந்த சட்டமன்றத்தொகுதி இருக்கிறது.
நட்ஷத்திர வேல்யூ கை கொடுக்கும் ,கூட்டணியும் வலுவாக இருப்பதால் வெற்றி பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறது .சின்காவின் இரட்டையரான லவ்-குஷ் சகோதரர்களில் லவ முதலில் வந்தவர்.