நாம் ஏற்கனவே வலியுறுத்தி சொன்னதைத்தான் தற்போது பாஜகவின் ‘சாணக்கியர்’ அமித்ஷாவும் சொல்லிவருகிறார்.
இன்னும் சொல்வதானால் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதே பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதற்குத் தான் ! பாஜகவின் ஆதரவாளர்களும் ,ஆதரவு நாளேடுகளும் ரஜினியை ஆதரித்து பெரிய அளவில் செய்திகள் போடுவதே அதற்காகத்தான் என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.
இரண்டு தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்திருந்திருக்கிறது பிஜேபி.
இந்த கூட்டு தொடருமா என்பது ரஜினியின் முடிவினைப் பொறுத்தது.
ஏனெனில் திராவிட அரசியல் இந்த தேர்தலில் இருந்து அகற்றப்படவேண்டும் என்பதுதான் ரஜினியின் அடித்தளம். அதுதான் புதிய கட்சியின் வேர். இந்த நிலையில் இருந்து ரஜினி விலக மாட்டார் என்று நம்பலாம்.
ஒருவேளை அமித்ஷா அழுத்தம் கொடுத்தால் திராவிட அரசியல் அகற்றத்துக்கு சமாதி கட்டிவிட்டு அதிமுகவுடன் இணைந்து கூட்டணி அமைப்பதற்கு ரஜினி இறங்கலாம்..
முதலமைச்சர் பதவியைப் பொறுத்தவரை ரஜினி வரமாட்டார் என்பது அவரது சத்திய வாக்கு.அதனால் எடப்பாடியாருக்கு ஆதரவு தரலாம் .தோள் கொடுக்கலாம்.
ஆனால் அதை ரஜினியின் ரசிகர்கள் ஏற்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.!
அவர்களது கனவு ஆசை இலக்கு எல்லாமே ரஜினி முதல்வர் பதவியில் அமர வேண்டியதுஎன்பது தான்.
மேலும் ரஜினி சொன்னபடியெல்லாம் எடப்பாடியார் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு அதிமுக இடம் கொடுக்காது.இன்னும் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கிறது.
பாஜக மேலிடம் நினைத்தால் அதிமுகவை பலவீனப்படுத்திவிடலாம்.அதற்கான சான்றுகளை இந்திய உளவுத்துறை ,ஐ.டி .டிபார்ட்மென்ட் ஆகியவைகள் மூலமாக திரட்டிவிடமுடியும்.!
எப்பேர்ப்பட்ட ஜெயலலிதா சசிகலாவை மடக்கியவர்களால் இன்றைய அதிமுக தலைவர்களை சிக்க வைக்க முடியாதா என்ன?
இத்தகைய சூழல்களுக்கு மத்தியில் அமைச்சர் அமித்ஷா சொன்ன பதில்கள் ஆய்வுக்கு உரியவை.!
யாருடன் பாஜக கூட்டணி என்பது தொடர்பாக அமித்ஷா அளித்துள்ள பேட்டிதமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது அண்ணா திமுக உடன் கூட்டணி அமைத்து இரண்டு தேர்தல்களை பாஜக சந்தித்துள்ள நிலையில், வரவிருக்கும் 2021 தமிழக சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்து”நடிகர் ரஜினிகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியம் உள்ளது ” என்பதாக அமித்ஷா கூறியுள்ளார். |
தேர்தலுக்கு இன்னும் பல மாத கால அவகாசம் உள்ளது எனவே முடிவு எடுக்க அவசரப்பட வேண்டியது இல்லை. உரிய நேரத்தில், உரிய முடிவை எடுப்போம். ரஜினிகாந்த் இன்னும் அரசியல் கட்சி எதையும் தொடங்கவில்லை.
தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக அவ்வப்போது மாற்றங்களை மேற்கொண்டு வருகிறோம். சூழ்நிலைக்கு ஏற்ப மேலும் சில மாற்றங்கள் செய்யப்படும் . அதிமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டு இரண்டு தேர்தல்களை சந்தித்துள்ளோம்.
ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இப்போதே சொல்ல முடியாது !
அரசியலில் 7 மாதம் என்பது நீண்ட நெடிய கால அவகாசம் ஆகும். எனவே எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை இப்போதே வரையறை செய்வது சாத்தியமில்லை” என்பதாக அவர் கூறியுள்ளார்