கொரோனா ஊரடங்கு காரணமாக கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு,அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி,100 பேர் பங்கேற்கும் வகையில் படப்பிடிப்பு நடத்தி கொள்ளலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டது இதையடுத்து சில சிறிய படங்களின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியன் -2 படப்பிடிப்புக்கு குறைந்தது 300 பேர் தேவை படுவதால், அடுத்த ஆண்டு மார்ச் மாதம்வரை இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.கமல் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசன் ,கிடைத்த இடைவெளியில்,மாநகரம்,கைதி,மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 323 வது படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கதாநாயகி உள்ளிட் ட மற்ற நடிகர்,நடிகைகள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நவீன தொழிநுட்ப யுத்தியை பயன் படுத்தி கணினி மூலம் அவரது புதிய தோற்றம் வடிவமைக்கப்பட்டு விட்டது.அவரின் தோற்றத்தை ரகசியமாக வைத்துள்ளனர்.வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு மேக்கப் கலைஞர்கள் கணினி தொழில்நுட் பத்தில் வடிவமைக்கப்பட்ட அவரது தோற்றத்தை அப்படியே கொண்டு வரும் வகையில் அவருக்கு சிறப்பு மேக்கப் போடப்பட்டு,போட்டோஷூட் மற்றும் புரோமோவுக்கான வீடியோ எடுக்கும் பணியை வடபழனியில் உள்ள ஸ்டூடியோவில் தொடங்கி உள்ளனர். உலகநாயகனின் இந்த புதிய தோற்றத்தை படக்குழு விரைவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.