நடிகர் விஜய் சேதுபதி, நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’.
இதை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி வருகிறார்.லலித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த ஜனவரி மாதம் தொடங்கி’கொரோனா லாக்டவுன்’ காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க, காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், மிஷ்கினின் சைக்கோ உள்பட சில படங்களில் நடித்த அதிதி ராவ் கமிட் செய்யப்பட்டு இருந்தார்.
ஊரடங்கு தளர்வு காரணமாக துக்ளக் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது.. இந்நிலையில் திடீரென ‘துக்ளக் தர்பார்’படத்தில் இருந்து அதிதி ராவ் திடீரென்று விலகிவிட்டார்.. லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட கால்ஷீட் பிரச்னையே அவர் விலகியதற்கு காரணம் என்கிறது படக்குழு.
இதையடுத்து அதிதி ராவுக்கு பதிலாக, விஜய் சேதுபதியுடன் ஏற்கனவே சங்கத் தமிழன் படத்தில் நடித்துள்ள ராசி கண்ணாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவ்விவகாரம் குறித்து இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் கூறும்போது, “கால்ஷீட்டை சரி செய்து பார்த்தோம். அதிதி ராவுக்கு வேறு படங்களின் கமிட்மென்ட் இருந்தால், அவர் நடிக்க முடியவில்லை. அடுத்த சாய்ஸாக எங்களுக்குத் தெரிந்தது ராசி கண்ணா. மார்வாரி பெண் கேரக்டருக்குப் பொருத்தமாக இருந்தார்.அவரையே ஒப்பந்தம் செய்துவிட்டோம். படப்பிடிப்பில் ராசி கன்னா அவர் கலந்துகொண்டார். பாடல் காட்சியை படமாக்கியுள்ளோம். 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் ஷூட்டிங்கை முடித்துவிடுவோம்’ என்றார். இதில் பார்த்திபன், மஞ்சிமா மோகன், கருணாகரன் உள்பட பலர் நடிக்கின்றனர்.