தமிழகத்தில் தியேட்டர்கள் இம்மாத இறுதி அல்லது நவம்பர் மாதம் முதல் வாரம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தியேட்டர்கள் திறக்கப்பட்டால் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு இருப்பதால், முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர். மகன்’ – அருள்நிதி, ஜீவா கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘களத்தில் சந்திப்போம்’, – சந்தோஷ் பி ஜெயக்குமாரின் ‘இரண்டாம் குத்து’ஆகிய 3 படங்கள் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.