தமிழின விரோதியான முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்க மாட்டேன் என்பதாக நன்றி வணக்கம் போட்ட மக்கள் செல்வன் விஜய்சேதுபதியை சிக்கலில் மாட்டிவிடுவதெற்கென்றே ஒரு குரூப் வேலை செய்கிறது போலும்.!
“தமிழரின தலைவர் பிரபாகரன் வாழ்க்கையை வெப் தொடராக எடுக்கப் போகிறேன். அதற்காக மக்கள் செல்வன் விஜய்சேதுபதியிடம் பேசப்போகிறேன்”என்பதாக ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறி இருக்கிறார்.
“தம்பி என செல்லமாக அழைக்கப்பட்ட மாவீரனின் வாழ்க்கையை எடுப்பதற்கு கடுமையாக உழைக்கவேண்டும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கையை எடுப்பது எவ்வளவு கஷ்டமோ அதைப்போன்றதுதான் புலிகளின் தலைவர் வாழ்க்கையைப்பதிவு செய்வதும்.பெரும் பணம் தேவைப்படும். இவர் முன்னர் எடுக்கப்பட்ட குப்பி, வனயுத்தம் போன்று எடுத்துவிடமுடியாது.சமுத்திரத்தை சந்தனக்கோப்பையில் அளந்து விடும் முயற்சி.
“விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையை வெப் தொடராக எடுக்கிறேன். இதற்கான படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும். பிரபாகரன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளேன். பிரபாகரன் வாழ்க்கை சம்பவங்கள் முழுவதும் இந்த தொடரில் இருக்கும். சுவிட்சர்லாந்து, டென்மார்க் நாடுகளுக்கு பயணித்து பிரபாகரனோடு நெருக்கமாக பழகியவர்களுடன் பேசி திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். எனக்கும் பிரபாகரனை சந்தித்து பேசிய அனுபவம் இருக்கிறது. இலங்கைக்கு 6 தடவை சென்று தகவல்களை திரட்டி இருக்கிறேன்.”என்கிறார் ரமேஷ்.
இராமாயணம் ,மகாபாரதம் ஆகிய காவியங்களை எடுக்கக்கூடிய பெரிய தயாரிப்பாளர்களால்தான் மாவீரன் பிரபாகரனை தொட முடியும். எனவே இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜயசேதுபதி நடிப்பாரா? இவரை விட வேறு யாருக்கும் பிரபாகரன் வேடம் பொருந்தாது என்பது உண்மைதான்.!