கடந்த வருடம் வெளி யான படங்களில் ரசிகர்களின் இதயத்தைகொள்ளை அடித்த முக்கியமான படம் ‘ராஜ தந்திரம் ‘. அந்ததலைப்பே இரண்டாவது பாகமாகவருகிறது.
ராஜ தந்திரம் 2 படத்தின் இயக்குனர் செந்தில் வீரா சாமி. இவர்இயக்குனர் கௌதம் மேனனிடம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.’ராஜ தந்திரம்’ 2′ படத்தில் இருந்துரசிகர்களின் ஆர்வத்தைக் கூட்ட ராஜ தந்திரம் முதல் பாகத்தில்நடித்த வீரா உட்படமூன்று பேர் நடிக்கும் முக்கியக் காட்சியானஒரு ஆறு நிமிட காட்சியை முன்னோட்டமாக வெளி யிட்டு உள்ளனர் படக் குழுவினர்.
‘ராஜ தந்திரம் 2 படம் முந்தைய படத்திலிருக்கும் சுவாரசியம்ஒன்றுக் கூட குறையாமல், நிறைய சுவாரசியம் கூடித்தான்வெளி வரும்.எங்களுக்கு வலு சேர்க்க இசை ஜாம்பவான்இளைய ராஜா சார் இணைந்து இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பெருமை.இந்த வருடம் வெளி வரும் என்பதையும் ,தமிழ் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு நிச்சயம் இருக்கும் எனக் கூறினார் செந்தில் வீராசாமி.ஆனால் இவர்களின் ராஜ தந்திரம் பலிக்குமா!என்பது படம் வெளிவந்தால் தான் தெரியும்!