பிரபல பெண் வழக்குரைஞர் தீபிகா சிங் ராஜவத்.
இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட கார்ட்டூன் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்திய அளவில் நம்பர் ஒன் ஆக டிரெண்ட் ஆகிவிட்டது.
இவர் யார்?
கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகிய பிரபலமான பெண் வக்கீல் . சிறுமை கண்டு பொங்குவாய் மனமே என்பதைப்போல பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறவர் தீபிகா சிங் ராஜவத்.
அவர் பதிவிட்ட சித்திரத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வது போன்றும், மற்றொன்றில் பெண்ணை வழிபடுவது போன்றும் வரையப்பட்டுள்ளது..
முதல் சித்திரம் மற்ற நாட்களில் பெண்களை வன்கொடுமை செய்வதையும் ,மற்றொரு சித்திரத்தில் நவராத்திரியில் வணங்கி வழிபடுவதை குறிப்பதாகவும் எழுதியிருக்கிறார்.
இதற்கு ஆதரவு பெருகிவருகிறது. சிலரின் எதிர்ப்பும் இருக்கிறது.