விஜய்சேதுபதிக்கு தயாரிப்பாளர் சங்கம் துணை நிற்கவில்லை என்பதுதான் கொடுமை. சோகம்.!
விஜய்சேதுபதிக்கு வேண்டிய திரைப்படத் துறைஒரு படத்தில் நடிப்பதற்காக கை நீட்டி அட்வான்ஸ் வாங்கிவிட்டால் அந்த நடிகர் கிட்டத்தட்ட கொத்தடிமைதான்!
“நடிக்கவிருப்பமில்லை ,அல்லது சில நிர்பந்தங்களால் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால்” சுலபத்தில் வெளியே வந்து விடமுடியாது. அவர்கள் கேட்கிற நட்ட ஈட்டையும் கொடுத்து விட்டுத்தான் வெளியேற முடியும். தயாரிப்பாளராக மனது வைத்து விட்டால்தான் வெளியேற முடியும்.
விஜய்சேதுபதியை 800 படத்தில் இருந்து வெளியேறச்சொன்ன திரைப்படம் சார்ந்த பிரமுகர்களுக்கு இது நன்றாகவே தெரியும்..
ஒரு படத்தில் நடிப்பதற்காக 11 லட்சம் அட்வான்ஸ் வாங்கியிருந்தார் மக்கள் செல்வன் விஜயசேதுபதி.
அதை விட்டு வெளியேற வேண்டிய நிலை. எதற்காக .ஏன் என்பதையெல்லாம் இங்கு விளக்க வேண்டிய அவசியமில்லை.அது தேவையற்றதும் கூட!
ஆனால் விஜய்சேதுபதியினால் வெளிவர முடிந்ததா?
2 கோடி கேட்டார் அந்த தயாரிப்பாளர். விஜயசேதுபதி வாங்கியது 11 லட்சம் மட்டுமே! ஆனால் திருப்பி கேட்பது 2 கோடி சார்! இது எந்த ஊரு நியாயம்!
விஜய்சேதுபதிக்கு தயாரிப்பாளர் சங்கம் துணை நிற்கவில்லை என்பதுதான் கொடுமை. சோகம்.!
திரைப்படத் துறையை சேர்ந்த நண்பர்கள் பெரு முயற்சி செய்து அவரை அந்த கொடுமையில் இருந்து வெளியில் கொண்டு வந்தார்கள் என்பதுதான் உண்மை. தயாரிப்பாளராக முன் வந்து விடுவித்தால்தான் உண்டு.