நடிகர் ராஜசேகர் கொரோனா தொற்றால்,பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த டாக்டர் ராஜசேகர் தமிழில் புதுமைப்பெண், புதிய தீர்ப்புகள், மீசைக்காரன், இதுதாண்டா போலீஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில், தப்புக் கணக்கு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ராஜமரியாதை, தர்மபத்தினி, இளமை, நானே ராஜா நானே மந்திரி உட்பட பல படங்களில் நடித்தவர்.
நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார.இவர்களுக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என இரு மகள்கள் உள்ளனர்.
இதில் ஷிவாத்மிகா ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார், ஷிவானி விரைவில் படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் ராஜசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தது தமிழ், தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
” ஜீவிதா, குழந்தைகள் மற்றும் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மைதான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம். மகள்கள் குணமடைந்து வீட்டுக்கு சென்று விட்டனர். நானும் ஜீவிதாவும் இப்போது நன்றாக இருக்கிறோம். விரைவில் வீடு திரும்புவோம்” என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் டாக்டர் ராஜசேகரின் மகள் சிவாத்மிகா தனது டுவிட்டர் பக்கத்தில் “எனது அப்பா நடிகர் ராஜசேகர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு நோயுடன் கடுமையாக போராடி வருகிறார்.அது அவருக்கு கடும் சவாலாக மாறியுள்ளது.
உங்கள் பிரார்த்தனைகள், அன்பு மற்றும் வாழ்த்துக்களும் தான் அவரை விரைவில் மீட்டெடுக்கும் என நாங்கள் நம்புகிறோம்.நான் உங்களிடம் கேட்டு கொள்வது எல்லாம், அவருக்காக,உங்களின் பிரார்த்தனைகள் மட்டுமே.
உங்கள் அன்பால், கொரோனோவுடன் தீவிரமாக போராடி வரும் அவர் நிச்சயமாக மீண்டு வருவார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது தமிழ்,மற்றும் தெலுங்கு திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.