தெலுங்கானா ,ஆந்திரா உள்ளிட்டஅண்டை மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அங்கிருந்து தமிழகத்துக்கு வரக்கூடிய வெங்காய வரத்துவெகுவாக குறைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயத்தின் விலை ரூ.100 முதல் ரூ.110 வரையும், சிறிய வெங்காயத்தின் விலை ரூ.120 ல் இருந்து ரூ. 130 வரையும் விற்பனை செய்யப்பட்து வருகிறது.
இந்த விலையேற்றம் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில்,அரசு, எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து கூட்டுறவு விற்பனை மையங்கள் மூலமாக கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யும்நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது வெங்காய விலை குறித்து மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
“பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்.
விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார்.
விலையிறங்குவாயா வெங்காயமே?இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்.
விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார்.
விலையிறங்குவாயா வெங்காயமே?
— Kamal Haasan (@ikamalhaasan) October 22, 2020