பாலிவுட் மற்றும் சாண்டல்வுட் திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பூதாகரமாக கிளம்பியிருப்பது பல நடிகர்,நடிகைகள் மத்தியில் கிளியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் சுஷாந்தின் காதலி ரியா, ரியாவின் சகோதரர் ஷௌவிக், சுஷாந்தின் மேலாளர் சாமுயல் மிரண்டா, தனிப்பட்ட உதவியாளர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட 16 பேரை போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக பல பாலிவுட் நடிகைகளுக்கும் தொடர்பிருப்பதாக தகவல் வெளியானது.மேலும் தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ், தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கும் போதைப்பொருள் தடுப்பு அமைப்பு அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு மற்றும் பாலிவுட் நடிகை சப்னா பாப்பி என்பவருக்கும் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவரிடமும் விசாரணை செய்ய மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இன்று அவர் போலீசார் முன்பு ஆஜராக வேண்டிய நிலையில்,நடிகை சப்னா பாப்பி திடீரென தலைமறைவாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.