இன்னிக்கி சரஸ்வதி பூஜை.! எல்லோரும் கல்விக்கடவுளுக்கு பொரி , கடலை ,தேங்கா பழம் வைத்து பயபக்தியுடன் சாமி கும்பிடுவார்கள்.
பசங்களுக்கு சொல்லவே வேணாம் எப்படியும் எடப்பாடி ஸ்டைலில் இந்த வருசமும் கரை ஏத்தி விட்ருமா என்று கும்பிடுவார்கள்.
அதெல்லாம் கிடக்கட்டும் .இப்ப சொல்ல வந்த சங்கதி என்னன்னு சொல்றதுதானே நியாயம்.!
ராதிகா ஆப்தே .நமக்கு தெரிந்த நடிகை. கொஞ்சம் வித்தியாசமான நடிகை.
2012 -ல் பெனடிக்ட் டெய்லர் என்பவரை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. லண்டன் வாழ் இசைக்கலைஞர். இப்ப வரை புருஷனோடுதான் வாழ்க்கை.
ஆனாலும் என்ன சொல்றாங்கன்னா அவங்களுக்கு கல்யாணத்து மேல நம்பிக்கை இல்லையாம்.!
அப்ப எதுக்காக கல்யாணம்?
” கல்யாணத்தின் மீது எனக்கு அவ்வளவா பெரிய நம்பிக்கை இல்லை! லண்டனைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டால், விசா பெறுவது ஈஸி என்பது தெரியவந்தது. இங்கே எல்லைகள் இருக்கக் கூடாதுங்க.. விசா பெரிய பிரச்னை என்பதால் நாங்கள் கல்யாணம் பண்ணிக்கொண்டோம்.. ஒன்றாக வாழ விரும்பினோம். இருந்தாலும் அது நியாயமில்லைன்னு நினைக்கிறேன் ” என்கிறார்.
என்னங்க இது அநியாயமாக இருக்கு ,வேற ஆள் பார்த்துட்டாரா ? சந்தேகம் வருமா வராதா?