வங்கக்கடல் போலில்லாமல் அலைகள் உயர்ந்து அடிப்பது அரேபியன்கடலில்தான்.!
பாலிவுட் நடிகர்கள் பெரும்பாலும் விரும்புவது கடலைப் பார்த்து உயர்ந்து நிற்கும் காஸ்ட்லியான அடுக்கு மாடி வீடுகள்தான்.!
ஹிருத்திக் ரோஷனுக்கு மும்பையில் வீடுகள் இருந்தாலும் தற்போது அரேபியன் கடலோரம் இரண்டு உயர்தர ஆடம்பர அடுக்குமாடி வீடுகளை வாங்கியிருக்கிறார். ஒற்றை அடுக்குமாடி வீடுகளில் பெண்ட் ஹவுஸ் எனும் தனித்த வீடுகள் !
விலை அதிகம் இல்லை 100 கோடிதான்!
ஜூகு கடற்கரையில் வெர்சோவா ஹைப்பர்லிங் நெடுஞ்சாலையில் இந்த ஆடம்பர வீடுகள் அமைந்திருக்கின்றன.
இரண்டே மகன்கள் இவர்களுக்காக இந்த வீடுகள்.!