கொரானா கொள்ளை நோய் தொடர்பாக ஊரடங்கினால் முடக்கப்பட்ட படங்களில் வலிமையும் ஒன்று.
தல அஜித்குமார் ,ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிற இந்த படத்திற்கு கதை வசனம் எழுதி இயக்குகிறவர் எச்.வினோத் .
யுவன் சங்கர் ராஜா இசை. நீரவ்ஷா ஒளிப்பதிவு .தயாரிப்பாளர் பாலிவுட் போனிகபூர் .
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் இருக்கிற ராமோஜிராவ் திரைப்பட நகரில் தொடங்கியது.
முக்கிய நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு பயந்து கொண்டிருக்கிற நேரத்தில் தல நடிக்கவந்திருப்பதை பாராட்டி வாழ்த்தி அவரது ரசிகர்கள் டிவிட்டரை தெறிக்கவிட்டிருக்கிறார்கள்.