இணைய தளத்தின் எழுச்சிநாயகியாக இருப்பவர் வனிதா விஜயகுமார்தான். மூன்று புருசன்களை கடந்திருந்தாலும் அப்பாவின் பெயரைத்தான் இன்னும் பெயருடன் ஒட்டி வைத்திருக்கிறார். அவரது பெயரை எடுத்துவிட்டால் இவர் யாரோ ஒரு வனிதா என்றுதான் நினைப்பார்கள் என்கிற அச்சமாகவும் இருக்கலாம்.
விதம் விதமாக விதண்டாவாதம் செய்வதில் இவருக்கு விஞ்சியவர் எவரும் இருக்கப்போவதில்லை. அந்த அளவுக்கு மூன்றாவது புருசன் பீட்டர் பால் விஷயத்தில் பல சங்கதிகளை அள்ளிவிட்டிருந்தார். தெய்வீகக்காதல் என சொல்லாததுதான் குறை. அடுத்தவள் புருஷனை அபகரித்து வந்து விட்டோம் என்பது தெரிந்திருந்தும் அந்த ஆளுடன் மோதிரம் மாற்றிக்கொண்டு வாழ்க்கையை அனுபவித்துவந்திருக்கிறார்.
என்னவோ காரணம் அந்த ஆளையும் அத்து விட்டுவிட்டார்.
தற்போது அவருக்குத் தேவை ஒரு அடைக்கலம் . அது அரசியலாக இருந்தால் என்ன ?இதுவரை பார்க்காத பீல்டு அதுதான். போய்த்தான் பார்ப்போமே!
இதை எப்படியோ நோட்டம் விட்டு தெரிந்து கொண்ட கஸ்தூரி பகிரங்கமாக போட்டு உடைக்க பாஜக தலைமை விளக்கம் சொல்லியிருக்கிறது.
“வனிதா அப்ளிகேஷன் போட்டிருக்கிறார் .இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்று.!
மிஸ்டர் முருகன் அண்ட் மிஸ்டர் கரு.நாகராஜன் ! பேசாமல் அப்ரூவ் பண்ணிடுங்க. கூட்டம் தெறிக்கும். சூப்பர்ஸ்டாருகளுக்குக் கூட அவ்வளவு பெருசா கூட்டம் கூடாது.! அதிரும்!