இன்று மதியம் கல்வித்தந்தை எனப்படும் ஏ .சி. சண்முகத்தை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசி வருகிறார். இவர் ஒரு பெருவணிகர் என்பது தெரிந்ததே! மேலும் இவர் தனியாக ஒரு கட்சி நடத்தி வருகிறார் .இந்த கட்சியை ரஜினியின் கட்சியுடன் இணைப்பதற்கும் பேச்சு நடத்தியதாக தெரிகிறது,
ரஜினி கட்சி ஆரம்பித்தால் பண உதவிகள் செய்வதில் இவரது பங்கு மிகவும் முக்கியமாக இருக்கும். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் .கட்சிக்கு பெரும் உதவியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. சண்முகத்தின் முக்கிய நோக்கம் அரசியலில் தன்னை நிலை நிறுத்திக்கொள்வதே என்கிறார்கள் அரசியல் வட்டத்தில்.
அவரது எண்ணம் ரஜினியின் கட்சி வழியாக நிறைவேறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தவர்.