பிரபல நடிகர் விஜயகுமார், இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.அதிமுக ஆதரவாளரான இவர் நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார் தலைமையில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மேலிடத் தலைவர் முரளிதரரான் ஆகியோரது முன்னிலையில் சென்னையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
கட்சிமேலிடம் தன்னை சட்டசபை தேர்தலில் போட்டியிட கட்டளையிட்டால் அதற்கும் தயார் என்று கூறியவர் தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு திரட்ட சூறாவளி சுற்றுப்பயணம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார்.