நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய பட த்துக்கு தற்போது ஈஸ்வரன் என பெயரிடப்பட்டுள்ளது பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தில்,கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க, மற்றொரு நாயகியாக நந்திதா ஸ்வேதா நடித்து வருகிறார்.
திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.இப் படத்தின் ஒளிப்பதிவை,திரு கவனிக்க, எஸ்.எஸ்.தமன்இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இப்படத்திற்காக நடிகர் சிம்பு தனது உடல் எடையை மிகவும் கணிசமாக குறைத்து செம பிட்டாக மாறியுள்ளார். இதன் வீடியோ சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது,
இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று மதியம் வெளியானது.இதில் சிம்பு காலையில் பாம்புடன் காட்சியளிக்கிறார்/ சிம்புவின் புதிய மற்றும் வித்தியாசமான தோற்றம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.