சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக இருப்பவர் காயத்ரி ரகுராம். அப்பா ரகுராம் இறந்துவிட்டார் .தமிழக பாஜகவில் மிகவும் வலுவான பேச்சாளி. “கண்ணியம் “கதகளி ஆடும் இவரது பேச்சில்!
ஒருமுறை விடுதலைசிறுத்தைகள் தலைவர் தொல் .திருமாவளவனை ஜோக்கர் என்று சொன்னார்..
பிறகு கறுப்பர் கூட்டம் குறித்த விவகாரத்தில் திருமாவுக்கு எதிராக வீடியோ பதிவிட்டார்..
, “என்ன மிஸ்டர் திருமாவளவன், நீங்க வேல் குத்திருக்கீங்களா? இல்ல பால் காவடி எடுத்துறீங்களா?. நீங்க திமுகவுக்கு கூஜா தூக்குறீங்க. கைநீட்டி காசு வாங்குறீங்க. அதுக்காக நீங்க சொல்றது எல்லாம் சரியாகிடுமா? இதோட எதுவும் பேசாதீங்க நாங்க சும்மா இருக்கமாட்டோம்” என்று ஆவேசமாக கூறியிருந்தார்
. இப்போது மனுதர்மம் குறித்த திருமாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மகளிரணி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய வெடிகுண்டு காயத்ரி ரகுராம், “என்ன மிஸ்டர் திருமாவளவன், என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? நடிகைகள் டிரஸ்ஸை கழற்றி ஆடுவார்கள் என்று சொல்கிறீர்களே.. நாங்கள் டிரஸ்களை அவிழ்த்து போட்டு ஆடுபவர்கள் இல்லை.. டிரஸ்களை கழற்றுபவர்கள் இல்லை, காலில் ஒன்னு இருக்கு.. ஞாபகம் வெச்சுக்குங்க.
“மதம்” மாற மறுத்த இளம்பெண்.. பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி நாங்கள் காலில் உள்ளதை கழற்றுபவர்கள்.. உங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பமாயிடுச்சு.. ஜெயிலுக்கு போக போறீங்க.. கடந்த வருஷமே உங்களை நேருக்கு நேர் விவாதத்துக்கு கூப்பிட்டேன்,
ஆனால் பயந்து கொண்டு அமெரிக்காவில் போய் ஒளிஞ்சிக்கிட்டீங்க.. இப்பவும் சிதம்பரத்துக்கு ஒடி போய் உட்காந்துட்டீங்க” என்று பேசினார்.