எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் அஞ்சலி-ஜெய் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் அவரது வளர்ப்புத் தாய் உள்ளே புகுந்ததால் காதலர்களின் சிறகு உடைக்கப்பட்டதாகவும் செய்திகள் உலா வந்தது.இந்நிலையில் புகழ் படமாவது தனக்கு விடியலை ஏற்படுத்தி தராதா? என்ற நப்பாசையில் பொதுவா பத்திரிகையாளர்களை கண்டாலே காத தூரம் ஓடும் ஜெய், பேட்டி கொடுக்க முன் வந்தார் அவரிடம் அஞ்சலியுடனான காதல் குறித்து கேட்ட போது, ‘அஞ்சலி தெலுங்கு சினிமாவிற்கு சென்ற பின் அவரை பார்த்தே 2 வருடங்கள் ஆகிவிட்டது.5 மாதங்களுக்கு முன், நானும் அஞ்சலியும் மீண்டும் சந்தித்துக் கொண்டோம். அப்போது இருவரும் செல்போன்’ நம்பர்களை பரிமாறி கொண்டோம் .அப்புறம், சில இடங்களுக்கு சென்று வந்தோம், தற்போது நட்பாக இருக்கும் நாங்கள் வரும் நாட்களில் காதலர்களாக மாறினாலும் ஆச்சரியமில்லை!’ என்கிறார்.