“என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும்அவசரம்” என பிரபல திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி தனது டுவிட்டரில் பதிவிட்டது .பெரும் திகிலை ஏற்படுத்தியிருக்கிறது.
கூடல் நகர் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் சீனுராமசாமி. அமரர் பாலு மகேந்திராவின் சீடர் .
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
நடிகர் விஜய்சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர் தான்.
மிரட்டல் குறித்து இயக்குனர் சீனு ராமசாமியை தொடர்பு கொண்ட போது ,தம்மை வீட்டில் வந்து சந்திக்குமாறும். நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன்,இது அரசியல் கட்சிக்கும் எதிரானது அல்ல, சில விஷயங்களை பத்திரிகையாளர்களிடம் மனம் விட்டு பேச விரும்புகிறேன்,நான் எடுத்த தமிழருக்கு ஆதரவான நிலைப்பாடு பற்றிய மிக தெளிவான சில விஷயங்களையும்,அது சார்ந்த எதிர்வினைகளை பற்றி பேச விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.
அண்மையில் 800 படம் தொடர்பாக அதில் விஜய்சேதுபதி நடிப்பதை விரும்பவில்லை என்பதை சூசகமாக வெளியிட்டிருந்தார். இலங்கை அதிபர் குடும்பத்துக்கு வேண்டியவர் முத்தையா முரளிதரன் என்பதால் அவரை சேர்ந்தவர்கள் மிரட்டியிருக்கலாம் என்கிற சந்தேகத்தை சிலர் கிளப்புகிறார்கள்.
சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் ஏற்கனவே தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.