இந்த கொரானா காலத்தில் வீடுகளில் என்ன நடந்தாலும் உற்றார் உறவினருக்கு சொல்ல முடிவதில்லை. ஓசையின்றி கொரானா உடலுக்குள் ஊடுருவுகிற பேராபத்து இருக்கிறது. இதனால்தான் கல்யாணத்தையும் காதும் காதும் வைத்த மாதிரி நடத்த வேண்டியதாக இருக்கிறது.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன். .தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வரும் படம், சுல்தான்.
இதில் கார்த்தி ஹீரோவாகவும், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயதசமி நாளில் வெளியானது..
இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென சென்னையில், நேற்று காலை இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனுக்கும், ஆஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யாருக்கும் அழைப்பு விடுக்காமல் நடந்த இந்த திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் கலந்து கொண்டார்.