எப்படியெல்லாம் கட்சியை வளர்க்க வேண்டியதாக இருக்கிறது. பாஜகவின் பார்வை மட்டுமல்ல ,அதனுடன் கூட்டுச்சேர்ந்த கட்சிகள் கூட நடிகைகளை ‘இழுக்கத்’ தொடங்கி யிருக்கிறது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்.
இவர் இந்தியில், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கிறார் சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.
இவர் மீது சமீபத்தில்,பிரபல இந்திப்பட நடிகை பாயல் கோஷ்,பாலியல் வன்கொடுமை குற்றச் சாட்டு கூறி இருந்தார். தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்துள்ளார்.
பாலியல் புகார் தொடர்பாக போலீசார், அனுராக் காஷ்யப் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். .இந்த விவகாரத்தில் பாயல் கோஷூக்கு ஆதரவாக மத்திய அமைச்சர், ராம்தாஸ் அத்வாலே கருத்துக்களை கூறியிருந்தார்.இது ஒரு சார்பான முடிவினை எடுப்பதற்கு உதவியதைப்போலாகும்.
இதுமட்டுமல்ல , அனுராக் காஷ்யப் மீதான புகார் பற்றி, பாயல் கோஷ் ஆளுநரைச் சந்தித்து விளக்கம் அளிக்கச் சென்றபோது, அமைச்சர் அத்வாலேவும் உடனிருந்தார். இது எந்த வகையில் நியாயப்படுத்தப்படுகிறது என்பது தெரியவில்லை
இந்நிலையில், ராம்தாஸ் அத்வாலேவின், இந்திய குடியரசு கட்சியில் பாயல் திடீரென இணைந்துள்ளார்.
இதுகுறித்து பாயல் தனது ட்விட்டரில் கூறியுள்ளதாவது, குடியரசு கட்சியின் மகளிர் பிரிவு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். என்னை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்த கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு நன்றி. இதை ஏற்பது எனக்கான மரியாதை. எனக்கான நீதி கிடைப்பதற்கு ஒருபடி நெருக்கமானதாக இருக்கிறது.ஒரு பெண்ணாக, பெண்கள் சமூகத்துக்குச் சேவை செய்ய இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.
அப்படியானால் அனுராக் காஷ்யப்புக்கு நீதி கிடைக்குமா?