டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தற்போது விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார்.வித்தியாசமான படைப்பாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் இப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்,கொரோனா லாக் டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளது.
கோப்ரா படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் நடக்கின்றன
நடிகர் விக்ரம் 12 வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிற போஸ்டரை முன்னமே வெளியிட்டு பரபரப்பு கூட்டி இருந்தனர். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார் .
இர்பான் பதான் பிறந்த நாளில், ‘கோப்ரா’ படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் மேலும் பிரெஞ்ச் இண்டர்போல் அதிகாரி அஸ்லான் எல்மாஸ் என்ற கேரக்டரில் இர்பான் பதான் நடித்து வருவதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.