அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ’காதல் கொண்டேன்” ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து கடந்த சில மாதங்களாக ’காதல் கொண்டேன் 2’ பாகமம் உருவாக்க இருப்பதாக ஊடகங்கள் செய்திகளை பரப்பி விட்டன.
இந்நிலையில் திடீரென செல்வராகவன், சாணிக்காகிதம் படத்தின் மூலம் நடிகராகவும் களமிறங்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.என்னடா சோதனை என்கிற நிலையில் இன்னொரு செய்தி கலக்கத்தை ஏற்படுத்தியது.
, தனுஷ் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால் உடனடியாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க முடியாத நிலைஉருவாகிஇருக்கிறது என்பதுதான் அந்த கலக்கல் செய்தி.ஆனால் , அதற்கு முன்பாக குறுகிய கால படைப்பாக செல்வராகவன் இயக்கும் திரைப்படம் ஒன்றில், கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க ,செல்வராகவன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.