தேர்தல் காலம் நெருங்க நெருங்க அவசரத்திட்டங்கள் அரைகுறைப் பிரவசமாகி சவக்குழியை சென்றடையும்.
இன்னும் 7 மாதங்கள் தேர்தலுக்கு!
முதல் போணி நாமக்கல்லில் நடந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரி 8 பேரை படுகாயத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
இதை தொடர்பாக மக்கள் நீதி மையத்தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டர் தளத்தில் அரசாங்கத்தை காய்ச்சி எடுத்துவிட்டார். இந்த கட்டிட ஒப்பந்தக்காரர் வீட்டில் வருமானவரி ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.
இனி கமல்ஹாசன் பதிவு:
“நாமக்கல் மருத்துவக் கல்லூரி, கட்டும் போதே இடிந்து விழுந்திருக்கிறது.
மக்கள் வரிப்பணம் 336 கோடி ரூபாய் உருமாறும் கோலம் இது.
சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்டி முடித்து அரசியல் ஆதாயம் தேடும் அவசரக் கோலமே இந்த அலங்கோலத்திற்குக் காரணம்.
உயிர் காக்கும் மருத்துவமனை உருவாகும் போதே உடைந்து போயிருக்கிறது. நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்.
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்யாதிருங்களய்யா.
மக்கள் நீதி மலர… தக்க தருணம் இதுவே.!”