சுட்ட பலமாக இருந்தாலும் சுவையாகத்தான் இருந்துவிடுகிறது. இது இயக்குனர் அட்லீயின் யோகம்.
இதுவரை அவர் தந்த படங்கள் எல்லாமே எதோ ஒரு கதையின் மறுஉரு என்றுதான் விமர்சனகர்த்தாக்கள் முத்திரை குத்தியிருக்கிறார்களே தவிர அட்லீயின் சுயம் என்று சொன்னதாக இல்லை. ஆனால் அவர் தந்த படங்கள் எல்லாமே கமர்ஷியலில் பக்கா.! லாபம்தான்.!
தற்போது அவர் பாலிவுட் ஷாருக் கானுக்கு கதை சொல்லியிருக்கிறார். நடிகருக்கும் பிடித்துப் போயிருக்கிறது. அது மட்டுமல்ல அட்லீ சுட்டதாக சொன்ன கதை எந்த படத்தினுடையதோ ,அதையே போட்டுக்காட்டியிருக்கிறாராம். அப்படியானால் அவர் படா தில்லான ஆள்தான்.!
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ,கே.ஆர் .விஜயா ஆகியோர் நடித்திருந்த தங்கப்பதக்கம்தான் அந்த படம் என்கிறார்கள்.
நார்த் இந்தியாவுக்கு செட் ஆகிற கதைதான்! என்ன, நடிகர்திலகத்தின் கம்பீரம் ஷாருக்கானுக்கு வரவேண்டும்.!