கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் அமல்படுத்த ஊரடங்கில், தற்போது, படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.அக்டோபர் மாதத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுடன் (31,ந்தேதி) முடிவடைய உள்ள நிலையில்,
ஊரடங்கை வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கூடுதல் தளர்வுகளுடன் கூடிய புதிய அறிவிப்பையும் தமிழக அரசு இன்று மாலை அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முக்கிய அம்சங்கள் வருமாறு,
# 9,10,11 ,மற்றும் 12 ஆம் வகுப்புகள் வரும் 16 ஆம்தேதி முதல் செயல்பட அனுமதி
# பள்ளி, கல்லுரி பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி
# அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி
# திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி
# தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி
# 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட திரையரங்குகளுக்கு நிபந்தனை
# நவ. 2 முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி
# காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படலாம்
# புறநகர் ரெயில் சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதி
அறிக்கை முழு விபரம் கீழே …..