தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது மகன் பிரபாகரனுடன் இணைந்து மீண்டும் ஹீரேவாக நடிப்பதாக சொல்லப்பட்ட ‘தமிழன் என்று சொல்’ படம் தற்போது கைவிடப்பட்டு விட்டதாம். அறிமுக இயக்குனர் அருண் பொன்னம்பலம் உருவாக்கிய இப்படத்தின் கதை மிகவும் சுவாரசியமான கதையாம்.இப்படத்தின் கதைப்படி மரைன் என்ஜினியரான சண்முக பாண்டியன் கடல் ஆராய்ச்சி விஷயமாக சில விஷயங்களை தனுஸ்கோடி பகுதியில் அலசி ஆராய, அங்கு குமரிகண்டமும் அங்கு வாழ்ந்த மன்னன் விஜயகாந்த் அவரின் வீர பிரதாபங்கள் மற்றும் ஆதித் தமிழர்கள் பற்றிய விவரமும், சில ரகசியங்களும் தெரிய வருகிறதாம்.கிட்டதட்ட முப்பது நாட்களுக்கும் மேல் படம் பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில், “ஷுட்டிங் இப்ப வேணாம். தேர்தல் முடியட்டும் .பிறகு பார்த்துக்கலாம்” அவங்க,அவங்க வேற வேலை பாருங்க என்று படக்குழுவுக்கு சொல்லப்பட்டிருக்கிறதாம்.