தென்னக திரையுலகில் பிரமாண்ட படைப்புகளுக்கு சொந்தக்காரர் இயக்குனர் ஷங்கர்.
தற்போது உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். சில தவிர்க்க முடியாத காரணத்தினால் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது தள்ளிப்போடப்பட்டுள்ளது.
இந்நிலை
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரும், கே.ஜி.எப் பட கதாநாயகனுமான யாஷ் என்பவரை தனது அடுத்த படத்தின் நாயகனாக தேர்வு செய்துள்ளாராம் ஷங்கர்.
தமிழ் தெலுங்கு,கன்னடம் மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில் யாசுடன் மொத்தம் நான்கு முன்னணி ஹீரோக்கள் நடிக்க உள்ளனராம் .
இந்தியில்,பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சக்கை போடு போட்ட ஷோலே பட பாணியில் அதிரடி ஆக்சன் கதையாக இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள். இதற்கான வேளைகளில் தற்போது இயக்குனர் சங்கர் மும்முரமாக இறங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.