பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டதால் பிரபலமானவர் மீரா மிதுன். இவர் தன்னைத்தானே சூப்பர் மாடல் என்பதாக சொல்லிக்கொள்ளுவார்.
பல நடிகர் நடிகைகள் குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிடுவது வாடிக்கை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீடியோ பதிவில், நடிகர்கள் விஜய், சூர்யா,திரிஷா மற்றும் அவர்களின் குடும்பத்தினரை தரக்குறைவாக பேசினார். இதையடுத்து மீரா மிதுன் பேசியதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. ஒரு கட்டத்திற்கு மேல் அவரது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் யாரும் பொருட்படுத்துவது இல்லை என்ற நிலை உருவாகி விட்டது.
இந்நிலையில்,மீராமீதுன் தனது டுவிட்டரில் மீரா எனும் தமிழ்ச்செல்வி என்ற பெயரில் ஒரு பட த்தை நடித்து இயக்க போவதாகவும்,அப்படத்தின் மூலம் பல பிரபலங்களின் முகத்திரையை கிழிக்கப்பபோவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் அதை நடிகர் தனுசுக்கு ‘டேக்’ செய்துள்ளார்.