பெண்ணின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்திக்கொண்டு பாலியல் ரீதியான சீண்டல்களில் ‘பலான’ ருசியை அனுபவிப்பதில் சிலருக்கு சுகம். அத்தகைய சீண்டல்களின் உண்மைத் தன்மையை உணராமல் பின்னர் அறிந்து வருந்துகின்ற பெண்களும் இருக்கிறார்கள்.
பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கான். இவரது மகள் ஐரா கான். அழகான பெண். வயது 14 இருக்கும்போது பாலியல் ரீதியான சீண்டலைப்பற்றி அறியாமல் இருந்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா ? நம்புங்கள் சில பெண்களுக்கு அந்த விஷமத்தின் உண்மையை அறிய நாளாகலாம்
“நான் 14 வயதில் ஒருவனால் பாலியல் ரீதியான சீண்டலுக்கு ஆளாகியிருக்கிறேன். அவன் தெரிந்தே அவ்வாறு செய்தானா என்பது எனக்கு தெரியவில்லை. தினமும் அவ்வாறு நடந்ததில்லை. ஒரு வருடம் கழித்துதான் என்னால் அவன் என்ன செய்தான் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.
உடனடியாக நான் என்னுடைய பெற்றோருக்கு கடிதம் எழுதி விட்டு அந்த சிக்கலான நிலையிலிருந்து விடுபட்டேன் அதன் பிறகு எனக்கு எந்த விதமான அவலமும் நடக்கவில்லை என்கிற உணர்வுக்கு திரும்பி விட்டேன்.”என்கிறார் ஐரா கான்.