அரசாங்கம் அனுமதி கொடுத்தால் மட்டும் திறந்து விடுவார்களா தியேட்டர்காரர்கள்?
அப்படி ஒருவேளை தியேட்டர்களை திறப்பதற்கு இணக்கமாகி பூங்கொத்து கொடுத்தாலும் ,நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் படங்களை கொடுப்பார்களா?
முடியாது முடியவே முடியாது!
பாரதிராஜா விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார். கியூப் கட்டணம் மேட்டர் என்னாச்சு என்று சாட்டையை சுழற்றுகிறார்.!ஆனால் இந்த சங்கம் அங்கீகாரம் பெற்றதா என்கிற கேள்வியையும் எழுப்புகிறார்கள்.
இன்று காலையில் இருந்து காணொளி வழியாக தியேட்டர் அதிபர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
திருப்பூர் சுப்பிரமணியம் , பன்னீர்செல்வம் இரண்டு சங்கமும் சேர்ந்து காரசாரமாக பேசிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. காரசாரமான பேச்சு இனிப்பாக வந்து நிற்குமா ? நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் சமாதானமாக போவார்களா?
VPF கட்டணத்தை ஏற்க தயாரிப்பாளர்களை தொடர்ந்து தமிழக தியேட்டர்களின் அதிபர்களும் மறுத்துள்ளனர்.
5 மாநிலங்களை சேர்த்து தென்னிந்திய திரையரங்கு உரிமையாளர் சங்கத்தை தொடங்கவும் திட்டம்.
ரசிகர்கள் எல்லோரும் தீபாவளிப் படங்களை பார்க்கிற ஆவலில் இருக்கிறார்கள்.
“பன்றிக்கு நன்றி சொல்லு” “எம்.ஜி.ஆர் .மகன்” “களத்தில் சந்திப்போம்”ஆகிய 3 படங்கள்.