சின்னத்திரை நிகழ்ச்சிகளிலேயே சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாத நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி. ஓவியா தற்கொலைக்கு முயன்ற விவகாரம், பருத்திவீரன் சரவணனை அதிரடியாக வெளியேற்றியது, ரைஸாவின் காதல் ரகளை,சேரன்- மீராமீதுன் விவகாரம் என பெரிய பட்டியலே நெட்டிசன்களால் வாசிக்கப்படுகிறது.
தற்போது பாலாஜி முருகதாஸ் குறித்து சனம் ஷெட்டியின் புகார் கடித விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.தர்ஷனின் முன்னாள் காதலி, நடிகை சனம் ஷெட்டி, தான் பெற்ற அழகிப் பட்டம் குறித்து சர்ச்சையான ஸ்டேட்மென்ட் மற்றும் காஸ்டிங் கோச் விவகாரத்தை விஜய் டிவி அப்படியே நீக்கி விட்டு மூடி மறைப்பதாக சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்நிலையில் பிக்பாஸின் முன்னாள் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை கஸ்தூரி, ” நடந்ததை மூடி மறைக்கறதுலயும் நடக்காததை உருவாக்குறதுலயும் விஜய் டிவியை அடிச்சுக்க ஆளில்லை. #disgusted” என பாலாஜி முருகதாஸ் மற்றும் நீக்கப்பட்ட அந்த புகார் கடிதத்தையும் போட்டு விளாசித்தள்ளியுள்ளார்.