‘தோழா’ வருகிற 25-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் இப்பட்த்தில் கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா, பிரகாஷ் ராஜ், விவேக் முதலானோர் நடித்துள்ள புதிய படம், ‘தோழா’ வம்சி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார்.இப்படம் குறித்து கார்த்தி கூறியதாவது,
‘தோழா’ இரண்டு கேரக்டர்கள் பற்றிய கதை. இதனை ஃபிரெஞ்ச் மொழி படத்தின் ரீ-மேக் என்று சொல்வதை விட, இது அந்த படத்தின் அடாப்சன் என்று தான் சொல்ல வேண்டும். வம்சி, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். தமிழுக்கான வசனங்களை ‘குக்கூ’ படப் புகழ் ராஜு முருகன் எழுதியுள்ளார்.அவரது வசனங்கள் பெரிதும் பேசப்படும். அதைப் போல மதன் கார்க்கி எழுதியுள்ள ஒவ்வொரு பாடல் வரிகளும் அர்த்தமுள்ள வரிகளாக அமைந்துள்ளன. இப்படத்தில் நாகார்ஜுனா ஏற்று நடித்திருக்கும் கேரக்டரை அவ்வளவு எளிதில் யாராலும் ஏற்று நடித்து விட முடியாது. தலை தவிர வேறு எந்தவொரு உடல் உறுப்பும் செயல்படாதவராக, ஒரு வீல் சேரில் அமர்ந்த நிலையில் வரும் அவரது கேரக்டர் அனைவரையும் நெகிழ வைக்கும். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’’ என்கிறார்.