சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த் ‘ரஜினிமுருகன்’ படத்தைத் தொடர்ந்து,இதே ஜோடி நடித்து வரும் இன்னொரு படம் ‘ரெமோ’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துஇரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது..இந்நிலையில் ‘இருமுகன்’ படத்தை அடுத்து இயக்குனர் திரு இயக்கும் ‘கருடா’ படத்தில் நடிக்கும் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷூக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் கோலிவுட்டில் தீயாய் பரவியுள்ளது
.இதுகுறித்து இயக்குனர் திரு அவசர,அவசரமாக தனது சமூக வலைத்தளத்தில், ‘கருடா படத்தில் காஜல் அகர்வால் மட்டுமே நாயகியாக நடிக்கின்றார். வேறு ஒரு நடிகை இந்த படத்தில் நடிக்க மறுத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் முற்றிலும் உண்மைக்கு முரணானது. வேறு எந்த நடிகையையும் நாங்கள் அணுகவில்லை’ என்று கூறியுள்ளார். ஆனால் முயற்சி நடந்தது உண்மை தான் என அடித்து சொல்கிறது கோலிவுட் வட்டாரம்.