மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து க் கொடுத்து மக்களிடம் கவனம் பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது 3-வது படமாக, விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியிருக்க வேண்டிய நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போயுள்ளது. இயல்புநிலை திரும்பிய பின்னரே அதாவது வரும் 2021 பொங்கலுக்கு ‘மாஸ்டர்’ திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்நிலையில்,
கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், தனது 4-வது படமாக உலகநாயகன் 232 வது பட த்தை இயக்க உள்ளார். கமல்-லோகேஷ் கூட்டணி தமிழக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிடும் போது #எவனென்று நினைத்தாய் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி போஸ்டர் வெளியிட்டார். இதனால் எவனென்று நினைத்தாய் என்பது தான் படத்தின் டைட்டில் என்று பலரும் புரிந்துகொண்டனர். ஆனால் அது வெறும் ஹேஷ்டேக் தான் என்றும், படத்தின் டைட்டில் அல்ல என்றும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்தது.இந்நிலையில் கமல்ஹாசன் பிறந்தநாளான இன்று இப்பட த்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள்ளது இப்படத்திற்கு 1986 ஆம் ஆண்டில் கமல்ஹாசன், சத்யராஜ், அம்ஜத்கான், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிசி, சாருஹாசன் மற்றும் ஜனகராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான விக்ரம் என்ற படத்தின் தலைப்பே வைக்கப்பட்டுள்ளது.
பக்கா ஆக்சன் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் டீசர் சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது. அரசியல்வாதிகள், போலீஸ்காரர்கள், ரவுடிகள் என அனைவரு ம் அருவா முதல் அதிநவீன ஆயதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள அந்த அறைக்குள் வரிசையாக வந்து அமர, , தலை வாழை இலையில் கறி விருந்துடன் , அவர்களுக்கு மத்தியில், எந்த நிமிடமும் வெடித்து சிதற காத்திருக்கும் அணுகுண்டு போல கம்பீரமாய் கமல் தானும் அமர்ந்து , ஆரம்பிக்கலாங்களா…என கேட்டு அதிரடியில் இறங்கும் இந்த கமல் வேற லெவல்.