நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தற்போது பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை தனது 14 வது படைப்பாக பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றது.இப் படத்தின் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
‘தடம்’ வெற்றிப் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, ‘சைக்கோ’ வெற்றிப் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், இவர்கள் இருவரும் முதன் முறையாக இணையும் இப்படம் பலரின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
இப்படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கின்றார்.இப்படத்தின் ஒளிப்பதிவை,கே.திலராஜ் கவனிக்க,அரோல் கரோலி இசையமைத்து வருகிறார். இணை தயாரிப்பு – M. செண்பகமூர்த்தி, R.அர்ஜீன் துரை