தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா,தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து மணந்தவர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகும் கதாநாயகியாகவே நடித்து வரும் சமந்தா தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார். இதையடுத்து அஸ்வின் சரவணன் இயக்கும் புதிய படமொன்றிலும் நடிக்க உள்ளார். விரைவில் இப்படங்களின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில் சமந்தா சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்,
கடந்த சில நாட்களுக்கு முன், விளம்பர பட ஷூட்டிங்கில் பங்கேற்ற சமந்தா, நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்த தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியையும் சில நாட்களுக்கு மட்டும் தொகுத்து வழங்கியதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலையில்பிரபல ஓடிடி தளத்துக்காக ‘டாக்’ ஷோ ஒன்றை நடத்த இருக்கிறார்.
அந்நிகழ்ச்சியின் புரமோவுக்காக அவர் அணிந்துள்ள வித்தியாசமான வண்ண உடை புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து விசாரிக்கையில் அது மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஷ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்ட துணியால் உருவான ஆடை என்றும் , அதன் விலையும் நாம் மலைத்து போகும் அளவுக்கு தான் என்கிறார்கள்.