வேல்ஸ், ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் என்ஜே.சரவணனுடன் நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் இணைந்து இயக்கியுள்ளபடம் மூக்குத்தி அம்மன்,தீபாவளிக்கு ஓடிட்டி தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தில் நயன்தாரா முதன் முறையாக அம்மன் வேடத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து ரஜினிகாந்தின் அண்ணாத்த, மற்றும் தனது காதலராகவே இருந்து வரும் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண், மற்றும் அவரது இயக்கத்தில் உருவாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களிலும் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடிக்கும் நிழல் என்ற த்ரில்லர் படத்தில்கதநாயகியாக நடிக்கிறார். அப்பு என் பட்டாத்திரி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில்,கடந்த 8 மாதங்களுக்கு பிறகு தற்போது இப்படப்பிடிப்பில் இணைந்துள்ளார் நயன்தாரா. இப்புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகிவைரலாகி வருகிறது.