சிம்பு-சுசீந்திரன் கூட்டணியில் கடந்த மாதம் தொடங்கிய ஈஸ்வரன் படப்பிடிப்பு தற்போது (நவம்பர் 6 ஆம் தேதி) நிறைவடைந்தது.கிராமத்துப் பின்னணியை கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
நிதி அகர்வால் சிம்புவுக்கு ஜோடியாகவும்,இவர்களுடன்,நந்திதா ஸ்வேதா, பால சரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர். திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் 26 ஆம் தேதி விஜயதசமி அன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில், இந்தப் படத்தின் நிறைவு நாளன்று படத்தில் பணியாற்றிய 400 பேருக்கும் தீபாவளி பரிசாக ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
தற்போது, ஈஸ்வரன் படத்தின்படப்பிடிப்பு மொத்தம் 40 நாட்களில் முடிவடைந்ததைத் தொடர்ந்து,கடந்த சில நாட்களுக்கு முன்பு, படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய சிம்பு,தற்போது, அதையும் முடித்துவிட்டதாக தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். சமீப கால சிம்புவின் அதிரடி நடவடிக்கைகள் கோலிவுட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து மாநாடு படத்தின் படப்பிடிப்பில் நாளை முதல் பங்கேற்கிறார்.வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார்.