நடிகர் விஜய்யை சுயமாக சிந்திக்க விடாமல் முன்னாள் எம்.எல்.ஏ.புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட மூவர் கும்பல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறி இருப்பதாக தெரிகிறது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் பெயரில் அவரது தந்தை அரசியல் கட்சி தொடங்கினார் .இதற்கு விஜய் உடனடியாக மறுப்பு தெரிவித்து,’எனக்கும், என் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லை. எனது பெயரையோ, புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்று விஜய் பகிரங்கமாக தனது தந்தைக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சி.,”அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்று விஜய்யின் பெயரில் கட்சி தொடங்கி இருப்பது உண்மைதான். ஆனால் கட்சிக்கும் விஜய்க்கும் சம்பந்தம் இல்லை, விஜய்யின் பெயரில் கட்சியை நான் பதிவு செய்திருக்கிறேன் இதற்காக என்னை விஜய் ஜெயிலில் தள்ளினாலும் கவலையில்லை, தந்தையை ஜெயிலுக்கு அனுப்பிய வரலாறில் அவர் பெயர் இருக்கும். விஜய் இப்போது ஒரு சதிகார கும்பலின் பிடியில் சிக்கியுள்ளார் அந்த கும்பலின் பிடியில் இருந்து அவரைமீட்பதே என் வேலை.”எனக்கூறினார்.
இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இது குறித்து கூறிய எஸ்.ஏ.சி, ‘விஜய்யை சுற்றி கிரிமினல்கள் இருக்கிறார்கள் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் முன்னாள் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் புஸ்ஸி ஆனந்த் என்பவரை குறிப்பிட்டதாகவே தெரிகிறது. அவர்தான் எஸ்.ஏ.சி யினால் நியமிக்கப்பட்டிருந்த விஜய் மன்ற நிர்வாகிகளை நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக தன்னுடைய ஆதரவாளர்களை நியமித்து வருகிறாராம். நாளடைவில் மொத்த மன்றத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிற முயற்சியே இது என கருதுகிறார் எஸ்.ஏ.சி.
இந்த பிரிவினை அரசியலை தன்னுடைய பிள்ளை புரிந்து கொள்ளவில்லையே என்கிற கவலை தந்தைக்கு இருக்கிறது.
இதனால்தான் ” கிரிமினல்களிடம் இருந்து தனது மகனை மீட்பது தந்தையாகிய தனது கடமை” என்றும் அவர் கூறி உள்ளார். விஜய் மற்றும் எஸ்.ஏ.சி விவகாரம் தொடர்ந்து நீடித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் பிரமுகருமான மறைந்த அஷ்ரப்பின் உதவியாளராக பணியாற்றியவர் புஸ்ஸி ஆனந்த். அப்போது, புதுச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்ற கவுரவ தலைவராக இருந்து வந்த புஸ்ஸி ஆனந்த், பின்னர் தலைவரானார்.2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் புஸ்சி தொகுதியில் போட்டியிட்டு, முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். இதனால் புஸ்சி ஆனந்த் என அழைக்கப்பட்டார்.எம்எல்ஏவாக இருந்தாலும் விஜய் மன்ற தலைவராக நீடித்து வந்தார்.தொடர்ந்து, புதுச்சேரியில் 2010ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு ஆனந்த் தோல்வி அடைந்தார். பின்னர் நடிகர் விஜய், புஸ்சி ஆனந்திற்கு, அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் பதவியை அளித்தார்.2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு மீண்டும் தோல்வி அடைந்த ஆனந்த், அதன்பிறகு, முழுமையாக விஜய் மக்கள் இயக்க பணியை தற்போது வரை கவனித்து வருகிறார்.என்பது குறிப்பிடத்தக்கது.