மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் சொல்லிட்டாப்ல,அவருடைய அடுத்த பிறந்தநாள் விழா கோட்டையில்தானாம்.!
இந்த நம்பிக்கை வேணும்யா மனுஷனுக்கு.!
“கட்சியை ஆரம்பிப்பேன்னார். சொன்னபடி நடந்தார்ல. அத மாதிரி எங்க தலைவர் நிச்சயம் கோட்டையில் கொண்டாடுவார்யா !” என்று குதூகலிக்கிறார்கள் உலகநாயகன் கமல்ஹாசனின் ரசிகர்கள் .தன்னுடைய மய்ய சகோதரர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் கமல் .அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
“என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும்,தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்திய ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பிற துறை ஆளுமைகள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்