விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கிவிட்டு தனியாக ரகசியக்கூட்டம் இன்று சென்னையை அடுத்த பனையூரில் நடக்கிறது.
எஸ்.ஏ.சி.யின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு இல்லை. மாநில பொறுப்பாளரான புஜ்ஜி ஆனந்த் தலைமையில் நடக்கவிருக்கும் இந்த மாநில அளவிலான கூட்டத்தில் தளபதி விஜய் கலந்து கொள்கிறார்.
கூட்டம் நடக்கிற இடத்திற்கு வந்த நிர்வாகிகளிடம் இருந்த செல்போன்களை புஜ்ஜி ஆனந்தின் ஆதரவாளர்கள் வாங்கி வைத்துக் கொண்டார்கள். புஜ்ஜி ஆனந்த் பேசிய பின்னர் தளபதி விஜய் பேசுவாராம். இவருக்கு இயக்கத்தில் மேலும் முக்கிய பொறுப்புகள் அளிக்கப்படலாம் என்கிறார்கள். .
தனக்கும் தன்னுடைய தந்தைக்கும் நடந்து கொண்டிருக்கிற பனிப்போரில் விஜய் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது இன்று தெரிந்து விடும்.
எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய வீட்டிலேயே அலுவலகம் திறந்து வைத்திருக்கிறார் .இங்கேயும் விஜய்யின் ரசிகர்கள் ,மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வந்து செல்கிறார்கள். மாநில அளவில் செயல்பட்டுக்கொண்டிருந்த பலரை புஜ்ஜி ஆனந்த் நீக்கிவிட்டு தன்னுடைய ஆதரவாளர்களை நியமித்திருப்பதை எதிர்த்து சிலர் நீதி மன்றம் செல்ல இருக்கிறார்கள் என்று தெரிகிறது.