உலக சினிமாக்களைப் பார்த்து வியக்கும் தமிழர்கள், உலக சினிமாக்களையே இப்போது இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில்,என்.டி நந்தா இயக்கிய “120 hours” என்ற ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை இயக்குநர் இமயம் பாரதிராஜா பார்த்து, வியந்ததோடு, டிரெய்லரில் மிரட்டியிருக்கிறாய் என்று புகழ்ந்து நந்தாவிற்கும், முதல் முறையாக ஹாலிவுட் படத்தில் அறிமுகமாயிருக்கும், நடிகை சாக்ஷி அகர்வால் மற்றும் நடிகர் பிரணய் காளியப்பனுக்கும் ஆசி வழங்கியுள்ளார்.