கடந்த ஒரு வாரம் முன்பு,பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர்கானின் மகள், இரா கான் தனது 14 வயதில் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி தெரிவித்து இருந்தது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், மற்றுமொரு பாலிவுட் நடிகையான அனுப்பிரியா கோயங்கா தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி வெளிப்படையாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், தெலுங்கில் ‘போட்டுக்காடு’ என்ற படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக அறிமு மாகி தொடர்ந்து இந்தியில், பாபி ஜசூஸ், டிஷூம், டாடி, டைகர் ஜிந்தா ஹே, தீபிகா படுகோனின் பத்மாவத், வார் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். வெப்தொடர்களிலும் நடித்துள்ளார்.இந்நிலையில், தனது 18 வயதில் ஓர் ஆன்மீகவாதி தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அனுப்பிரியா கோயங்கா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது,” என் தந்தை கடவுளை நம்புவதை விட, ஆன்மீகவாதிகளையும் சாமியார்களையும் அதிகமாக நம்பினார். அதிலும் என் குடும்பத்தினர் அந்த ஆன்மீகவாதியை அதிகமாக நம்பினார்கள். நானும் அந்த சாமியாரை நம்பினேன் . அந்தளவுக்கு அவர் நியாயமானவராக இருந்தார். சரியான விஷயங்களைச் சொன்னார். ஆனால், எனக்கு 18 வயதாக இருந்தபோது என்னை அவர் தவறாக பயன்படுத்திக் கொள்ள முயன்றார்.ஆனால், நான் அதற்கு இடம் கொடுக்க வில்லை. அந்த சம்பவம் நீண்ட நாட்களாக என்னுள் ஆறாத வடுவாகவே இருந்தது. ஒருவழியாக அது இப்போது மறைந்தும் போய்விட்டது அந்த நேரத்தில் என்னால் அவரிடம் இருந்து தப்பிக்க முடிந்தது. ஆனாலும் சிறிது நேரம் போராட வேண்டி இருந்தது. இவ்வாறு நடிகை அனுப்பிரியா கோயங்கா கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.