நடிகர் விஜய் பெயரில் இயங்கி வந்த ‘ரசிகர் மன்றத்தை’ அவரது தந்தை எஸ்.ஏ.சி, ‘அரசியல்’ கட்சியாக பதிவு செய்த விவகாரம், தந்தை-மகன் இடையில் பெரிய பிளவையும்,கடும் மோதலையும் ஏற்படுத்தி உள்ளது. தனது அம்மாவையே அப்பா எஸ்.ஏ.சிக்கு எதிராக பேட்டியளிக்கவும் வைத்தார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தனது மாநில மாவட்ட முக் கிய நிர்வாகிகளை, தனது தந்தையை விட மேலாக நம்பும் தனது மன்ற தலைமை பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் அழைத்து, தனது தந்தை தொட ங்கியுள்ள புதிய கட்சிக்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவோ, நேரடியாகவோ,மறைமுகமாகவோ ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்தவர், எஸ்.ஏ.சியின் தீவிர ஆதரவாளர்கள் யார்,யார் என்பது குறித்தும் தகவல்களை திரட்டியதோடு , (முன்னதாக எஸ்.ஏ.சியின் ஆதரவாளர்கள் என கருதப்படுகிற ஒருவருக்கும் அழைப்பு மன்றத்தலைமையிடம் இருந்து அனுப்பப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) . முதல் வேலையாக மாவட்டம் வாரியாக விஜய் மக்கள் இயக்கத்தில் நிர்வாகிகளாக இருக்கும் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் தீவிர ஆதரவாளர்களை அடியோடு நீக்கியதோடு , அவர்களுக்கு பதிலாக, புஸ்ஸிஆனந்த் கைகாட்டும் புதிய நிர்வாகிகளின் அறிவிப்பு பட்டியலை தனது கையெழுத்துடன் விஜய் வெளியிட்டு வருகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் இனி விஜய் மக்கள் இயக்கத்தினர் கொடி,மற்றும்விஜய்யின்புகைப்படங்கள்ஆகியவற்றை பயன்படுத்த விஜய்மக்கள்இயக்கபொறுப்பாளர் அனுமதிபெறவேண்டும் என்றும்,மேலிட ஒப்புதல் இன்றி தனிமுடிவு எதுவும் எடுக்ககூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அதேபோல் தனது விஜய் மக்கள்இயக்கம் அலுவலகத்தைதனது பனையூர் இல்லத்திற்கு மாற்றியுள்ளார். இச்சம்பவம்எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதரவாளர்கள் மத்தியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.