தெலுங்குதிரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி,தற்போது தனது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கடந்த திங்கட்கிழமை தனது ட்விட்டரில், ‘ஆச்சாரியா படத்தின் ஷூட்டிங்கிற்கு முன்பு, முறைப்படி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.நானும் செய்து கொண்டேன். எதிர்பாராதவிதமாக எனக்கு பாசிட்டிவ் என்று வந்துவிட்டது. ஆனால் எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. இதனால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த 5 நாட்களில் என்னைச் சந்தித்தவர்கள், கொரோனா சோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.
உடனடியாக நடக்க இருந்த படப்பிடிப்பும் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து , நடிகர் சிரஞ்சீவி விரைவில் குணமடைய ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், மீண்டும் தனக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், தனக்கு நெகடிவ் என வந்துள்ளது.மருத்துவர்கள் குழு எனக்கு மூன்று வெவ்வேறு சோதனைகளை செய்தது. அதில் எனக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. முந்தைய முடிவு, கொரோனா கிட்டில் பிசிஆர் கிட பரிசோதனையில் ஏற்பட்ட தவறாக இருந்திருக்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் என் மீது காட்டிய அக்கறை மற்றும் அன்புக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.